நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-
எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.
அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.
தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!
இவ்வாறு அவர் கூறினார்.