தமிழக செய்திகள்

கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள்

புதிய அரசு பதவி ஏற்றபின்னர், சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.

தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது.

இந்த கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. முதலமைச்சராக விஜய் உள்ளார். கடந்த மாதம் 13-ந்தேதி நடந்த நம்பிக்கை தீர்மானத்தில் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

இதையடுத்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டசபை கூடவேண்டும். இதையொட்டி முதலமைச்சர் தலைமையில் கடந்த 5-ந் தேதி தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நடந்தது.

அதில் ஆளுநர் உரை, புதிய அறிவிப்புகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

புதிய அரசு பதவி ஏற்றபின்னர், சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.

இந்நிலையில், 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தனர்.

'வாயத் திறங்க CM' என்ற வாசகத்துடன் கூடிய கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக சட்டசபை உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.