திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
பல வியூகங்கள் வகுத்து நம்மல வீழ்த்தியிருக்காங்க. நம்ம தலைவர் கொளத்தூர் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். தலைவரை ஜெயிச்சவன், 5 நிமிடம் பேசினேன், கொத்து பரோட்டா ஆக்கிட்டேன் என்று சொல்றான். யார் சொல்றா.., சாய்ங்காலம் 6 மணிக்கு போனா, காலைல 10 மணிக்கு எழும்புவான். அவனுக்கு என்ன நடக்குதுனு தெரியாது தமிழகத்துல. தமிழகத்துல யார் இருக்கா, இல்ல, யாருக்கு செய்தோம் என்பதே தெரியாது.
நேற்றைய தினம் ஒரு கூட்டத்ல பேசுறாரு. பேசிக்கிட்டே இருக்கும்போது ஒரு பேப்பர எடுத்து வாசிக்கிறாரு. சினிமாவுல நடிக்கிற மாதிரி நடிக்குன்னு நினைக்கிறாரு. இந்த வேசமெல்லாம் எடுபடாது. வரலாற்றை உருவாக்குகின்ற காலம் உள்ளாட்சி தேர்தல். உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது என்ற வரலாறு உருவாக்கக்கூடிய சகோதரர்களாக நாம் இருக்க வேண்டும்.
காங்கிரஸ் எங்கேயாவது ஜெயிக்கட்டும் பார்ப்போம். எந்த இடத்திலாவது த.வெ.க.வா, க.வெ.க.வா ஜெயிக்கட்டும் பார்ப்போம். அவன் ஜெயிக்கட்டும் பார்ப்போம்.
இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் யாரை ஆதரிக்கின்றாரோ, அவர்தான் வெற்று பெறுவார் என்ற வரலாறை உருவாக்க போகின்றோம்.
இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
துாத்துக்குடி மாவட்டம், ஆத்துாரில் ஜூன் 20-ம் தேதி நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், துாத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.
அப்போது, நான் நடிகையரோடு வீட்டில் ஜாலியாக இருந்தேன். என்னை இப்படி முதல்வராக்கி, மாட்டி விட்டுட்டீங்கன்னு, தன்னுடன் இருப்பவர்களிடம் முதல்வர் விஜய் புலம்புகிறாராம்' என்று தெரிவித்தார்.
முதல்வர் விஜய் குறித்த இந்த அவதுாறு பேச்சுக்காக அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி த.வெ.க., ஆத்துார் நகரச் செயலாளர் செல்வம், ஆத்துார் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அவதுாறாக பேசுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ், அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.