மாணிக்கம் தாகூர் 
தமிழக செய்திகள்

தி.மு.க.வினர் புரிந்து கொள்ளாமல் ஆணவத்துடன் செயல்படுகிறார்கள்- மாணிக்கம் தாகூர் தாக்கு

மக்கள் எவ்வளவு தண்டித்தாலும் அவர்கள் புரிந்து கொள்ளாமல் ஆணவத்துடன் இருக்கிறதை பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இரண்டாம் இடத்திற்கு வந்ததை தி.மு.க.வினர் கொண்டாடுகிறார்கள்.

தி.மு.க.வுடன் கூட்டணி கட்சிகள் இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களிடம் இருக்கின்ற தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி உட்பட இருக்கின்ற கட்சிகள் கூட்டணி கட்சிகள் இல்லையா? தி.மு.க.வை மக்கள் தோற்கடித்தும் அதை உணராமல், வாக்கு வங்கி சரிந்து உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் 8000 ஓட்டு குறைவாக வாங்கி இருக்கிறார்கள். இன்னும் வெற்றியில் தோல்வி, தோல்வியில் வெற்றி என்று சொல்லிக் கொண்டே இருக்கட்டும்.

திமுக

மக்கள் எவ்வளவு தண்டித்தாலும் அவர்கள் புரிந்து கொள்ளாமல் ஆணவத்துடன் இருக்கிறதை பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இரண்டாம் இடத்திற்கு வந்ததை தி.மு.க.வினர் கொண்டாடுகிறார்கள். 3-வது இடத்திற்கு வருவோம் என்று எதிர்பார்த்தார்கள். 2-ம் இடத்திற்கு வந்து விட்டார்கள். அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை 3-ம் இடத்திற்கு எவ்வளவு வேகமாக இழுத்து வர முடியுமோ அவ்வளவு வேகமாக இழுத்து வந்து விட்டார்கள்.

திமுக கூட்டணி

தி.மு.க.வுடன் கூட்டணி கட்சிகள் இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களிடம் இருக்கின்ற தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி உட்பட இருக்கின்ற கட்சிகள் கூட்டணி கட்சிகள் இல்லையா? தி.மு.க.வை மக்கள் தோற்கடித்தும் அதை உணராமல், வாக்கு வங்கி சரிந்து உள்ளது. அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று உணராமல் இப்படி ஆணவத்தோடு நடந்து கொண்டிருப்பது வருத்தம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT