தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் மைசூர் அருகே உள்ள குடகு மலை சென்று ஓய்வெடுத்து வருகிறார். சட்டசபை தேர்தல் முடிந்ததும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்று 5 நாட்கள் தங்கி இருந்தார்.
அதன் பிறகு தேர்தல் முடிவுகள் வந்த பிறகு திருமண நிகழ்ச்சிக்காக திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு சென்று வந்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூர் சென்றார். அங்கிருந்து காரில் கூர்க் எனப்படும் குடகு மலை சென்றடைந்தார்.
அவருடன் மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேர் சென்றுள்ளனர். ஜூன் 2-ந்தேதி அவர் சென்னை திரும்புவார் என தெரிகிறது.