தமிழக செய்திகள்

தீர்ந்து போன சக்தியுடன் தீய்ந்து போன சக்தியாக மாறிவிட்டது திமுக- முதலமைச்சர் விஜய்

திமுக தீய சக்தி மட்டுமல்ல மக்களைவிட்டு விலகிய தூர சக்தி.

திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் நன்றி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திமுக இப்போ தீய சக்தி மட்டும் இல்ல, தூர சக்தி, ஓர சக்தி, கோர சக்தி, பார சக்தி.. தீா்ந்து போன சக்தியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்ற திமுக தீய்ந்து போன சக்தியாக மாறிவிட்டது.

திமுக தீய சக்தி மட்டுமல்ல மக்களைவிட்டு விலகிய தூர சக்தி.

தீர்ந்துபோன சக்தியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்ற திமுக தீய்ந்துபோன சக்தியாக மாறிவிட்டது.

நம்மை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களே ஆப்பு வைத்துக்கொள்கிறார்கள்.

ஊழலற்ற ஆட்சியை கொண்டு வருவோம், தவெக வெல்லாத தொகுதியும் நமது தொகுதிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.