தமிழக செய்திகள்

தேர்தல் தோல்வி பற்றி ஆராய தி.மு.க.வில் கள ஆய்வு குழு- தொகுதி வாரியாக செல்கிறார்கள்

கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5-ந்தேதிக்குள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக 36 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்களை நேரடியாக சந்தித்து அவர்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் பெற்று கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5-ந்தேதிக்குள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

தொகுதி வாரியாக செல்ல உள்ள குழுவினர் விவரம்:-

சென்னை திருவொற்றியூர், மாதவரம், ஆர்.கே. நகர், பெரம்பூர், ராயபுரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கு எம்.எம். அப்துல்லா, ரேகா பிரியதர்ஷினி ஆய்வு செய்கின்றனர்.

எழும்பூர், கொளத்தூர், அம்பத்தூர், துறைமுகம், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், மதுரவாயல், விருகம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளுக்கு எஸ்.கே.பி. கருணா, கே.ஈ.பிரகாஷ் எம்.பி. செல்கின்றனர்.

உத்திரமேரூர், காஞ்சிபுரம், செய்யூர், மதுராந்தகம், ஆலந்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், பல்லாவரம், தியாகராய நகர், மயிலாப்பூர் தொகுதிகளுக்கு ஹெலன் டேவிட்சன், கே.இளமகிழன் கள ஆய்வு நடத்த உள்ளனர்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் குழு சென்று ஆய்வு மேற்கொள்கிறது.