தமிழக செய்திகள்

தூய சக்தி இல்லை, விஜய் முகமூடி விலகியது - திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பு எம்எல்ஏக்கள் வாக்களித்தார்கள் என்றால் அவருடைய ஆட்சி இப்படித்தான் இருக்கும்.

சட்டசபைக்கு வெளியே முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபையின் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு வினாக்களை எழுப்பினார்கள். அந்த வினாக்களுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. தேர்தல் காலத்தில் தூய சக்தி, தீய சக்தி என்று பிரசாரம் செய்தவர், இன்று அந்த தூய சக்தி என்ற தன்னுடைய முகமூடிய விளக்கிக் கொண்டுள்ளார். அவர் அந்த அடையாளத்தில் இருந்து முற்றிலுமாக விலகி நிற்கிறார்.

அவர் இன்னொரு வாக்குறுதி இருந்து விலகி உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து யாருடைய ஆதரவு பெறமாட்டோம் என்று கூறினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ-வை அவரது பக்கம் இழுத்து உள்ளார். அதற்கு டிடிவி தினகரன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.

நேற்றைக்கும், இன்றைக்கும் சட்டமன்றத்தில் அவர் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒரு பகுதி அவருக்கு ஆதரவு அளித்து இருப்பதன் மூலம் அவர் தூய சக்தி இல்லை. குதிரை பேர சக்தி என்று இதன் மூலம் காட்டுகிறது.

ஓடுகிற குதிரை என்றால் இல்லை அவர் வாடகைக்கு குதிரையை எடுத்து ஓட்டுகிறவர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பு எம்எல்ஏக்கள் வாக்களித்தார்கள் என்றால் அவருடைய ஆட்சி இப்படித்தான் இருக்கும். இந்த ஆட்சிக்கு கொள்கை கிடையாது. லட்சியம் கிடையாது, பதவி அதிகாரத்தை பெரும் நோக்கம்தான்.

இதுவரை அவர் ஓட்டு ஏ திரைப்படம் முடிவுக்கு வந்துள்ளது. இது பாஜக ஆதரவோடு நடைபெறும் ஆட்சிதான். தூய சக்தி என்ற நாடகம் முடிந்து விட்டது.

சட்டமன்றத்தளத்தில் நம்பிக்கை பெற்றுள்ளார். ஆனால் மக்கள் நம்பிக்கை தளத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார். இது வாடகை குதிரையில் மேற்கொள்ளும் ஆட்சி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.