தமிழக செய்திகள்

DMK | தேர்தல் பிரசாரத்தை 31-ந்தேதி தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டம் மாவட்டமாக சென்று பிரசாரம் செய்ய இருக்கிறார்.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வது என்ற இலக்கை முன் வைத்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

இதற்காக 22 கட்சிகளை ஒருங்கிணைத்து ‘மெகா’ கூட்டணியை உருவாக்கி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டம் மாவட்டமாக சென்று பிரசாரம் செய்ய இருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ந்தேதி பிரசாரத்தை தொடங்குவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தை வரும் 31-ந்தேதி திருவாரூரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

ஏப்ரல் 21-ந்தேதி வரை முதலமைச்சர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடர உள்ளதாகவும் கொளத்தூரில் முதலமைச்சர் பிரசாரத்தை இறுதி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.