தமிழக செய்திகள்

தி.மு.க- பா.ஜ.க இடையே தான் சுமூக உறவு- அமைச்சர் நிர்மல் குமார்

சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை.

திமுக- பாஜக இடையில் தான் சுமூக உறவு உள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தவெக- பாஜக இடையே சுமூக உறவு உள்ளதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:-

செந்தில் பாலாஜி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்போது வரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி அளிக்காததன் மூலம் திமுக- பாஜக உறவு தெரிகிறது.

சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை.

முதலமைச்சர் வாய் திறப்பதில்லை என்று உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். இன்று ஆளுநர் உரைக்கான நாள் அவர் தான் பேசுவார். ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் நாளில் முதலமைச்சர் பேசுவார்.

சட்டப்பேரவையின் விதிகள் குறித்து தெரிந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச வேண்டும்.

ஒவ்வொரு இடங்களிலும் தனிப்பட்ட சம்பவங்களால் குற்றங்கள் நடக்கிறது. அரசு அதனை எவ்வாறு கையாளுகிறது எனப் பாருங்கள்.

எங்கு குற்றம் நடந்தாலும் யாரு செய்தாலும் முந்தைய அரசை போல் தவெக அரசு மூடி மறைப்பதில்லை, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திமுகவினரின் தூண்டுதலின் பேரில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுத்தப்படுகிறது. எங்கு மின்வெட்டு ஏற்பட்டாலும் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.