அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இணைந்து செயல்படுகின்றனர். மதுராந்தகம் தி.மு.க.வுக்கு, தாராபுரம் அ.தி.மு.க.வுக்கு என்ற வகையில் செயல்படுகின்றனர். ஒன்னு தி.மு.க.விற்கு ஓட்டு போடுங்கள், இல்லை அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள் விசிலுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி சதி செய்கின்றனர்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற்று வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தாராபுரம் வரத் தொடங்கி உள்ளதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்துள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவரான தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதேபோல் தமிழக அமைச்சர்கள் அருண்ராஜ், செங்கோட்டையன் மற்றும் சி.விஜயகுமார் ஆகியோர் தாராபுரத்திலேயே முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தாராபுரம் அருகே உள்ள பூளவாடி பகுதியில் நேற்று உப்பாறு அணை தொடர்பாக விவசாயிகளுடன் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தாராபுரம் பகுதியில் மக்கள் த.வெ.க.வுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என வருத்தப்படுகின்றனர். இம்முறை கட்டாயம் த.வெ.க.வுக்குத்தான் வாக்களிப்போம் என்று தெரிவிக்கின்றனர். கட்டாயம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம்.
மக்கள் த.வெ.க. வேட்பாளருக்கு எதிராக இல்லை. அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் த.வெ.க. வேட்பாளருக்கு எதிராக மக்கள் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். நான் மக்களுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கூட மக்கள் எதிர்ப்பு எனப் பேசுகின்றனர்.
அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இணைந்து செயல்படுகின்றனர். மதுராந்தகம் தி.மு.க.வுக்கு, தாராபுரம் அ.தி.மு.க.வுக்கு என்ற வகையில் செயல்படுகின்றனர். ஒன்னு தி.மு.க.விற்கு ஓட்டு போடுங்கள், இல்லை அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள் விசிலுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி சதி செய்கின்றனர்.
அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மின்தடை ஏற்படுவதில்லை. இன்று கூட மைக் வயர்தான் பிரச்சினை. மின்தடை ஏற்படவில்லை. எங்கள் வாக்குகள் விற்பனைக்கு இல்லை என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் உணர்த்தப் போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.