தமிழக செய்திகள்

போதைப்பொருள் பறிமுதல் குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை - திமுக குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசு இருக்கிறதா, காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

சென்னை அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் கடத்தப்பட இருந்த போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.

* போதைப்பொருள் கடத்தல் குறித்து சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏன் வாய் திறக்கவில்லை.

* இடைத்தேர்தலில் பூபாலனின் பணம் தான் கைமாறி உள்ளது.

* இடைத்தேர்தலில் போதைப்பொருள் விற்பனை பணம் பயன்படுத்தப்பட்டது.

* 137 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.

* தமிழ்நாடு அரசு இருக்கிறதா, காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

* போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் தவெக நிர்வாகிகள் 9 பேர் ஈடுபட்டுள்ளனர்.

* முதலமைச்சரின் தவெக வெற்றிக்கழகமா அல்லது DRUGS வெற்றிக் கழகமா என்ற கேள்வி எழுகிறது.

* முதலமைச்சர் அவர்களே, இளைஞர்களை ஓட்டுப்போடும் இயந்திரங்களாக பார்க்காதீர். இளைஞர்களை ஏமாற்றாதீர்.

* உங்கள் ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT