கோயம்பேடு:
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா கூறியதாவது:-
* தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தே.மு.தி.க. கூட்டணி அமைத்துள்ளது. மகத்தான வெற்றி கிடைக்கும்.
* தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைக்கவில்லை என்பது கற்பனை செய்தி.
* தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் தே.மு.தி.க.வை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
* தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமைஅறிவிப்பு வெளியாகும்.
* புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்றார்.