தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நெல்லை இடையே நாளை இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு நெல்லை சென்றடையும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நெல்லைக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06111) இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு நெல்லை சென்றடையும். அதே போல, நெல்லையில் இருந்து வருகிற 9-ந்தேதி இரவு 7 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் (06112) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
பண்டிகை காலத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் இந்த சிறப்பு ரெயில் சேவையைப் பயன்படுத்தி, தங்களது பயணங்களை திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.