தமிழக செய்திகள்

மாமல்லபுரம் ரேஷன் கடையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் மாவட்ட வருவாய் அலுவலர் பர்கத்பேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட இடங்களில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் முகாம்கள் மற்றும் கள ஆய்வுகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் மாவட்ட வருவாய் அலுவலர் பர்கத்பேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ரேசன் பொருட்கள்

அப்போது கடையில் இருந்த பெண் ஊழியரிடம் மக்களுக்கான வசதிகள், ரேசன் பொருட்கள் இருப்பு, கடை பராமரிப்பு உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார். பின்னர் பொறுப்புடன் இருந்த அவரை பாராட்டினார். ஆய்வின்போது திருக்கழுக்குன்றம் தாசில்தார், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT