தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் இன்று திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.
பாக்யராஜ் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவருடைய உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
மறைந்த டைரக்டர் கே.பாக்யராஜ் தன் கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி பதிவு செய்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கே.பாக்யராஜ் கண்களை தானம் செய்ய பதிவு செய்து வைத்திருந்ததால் அவரது வீட்டுக்கு கண் மருத்துவமனை குழுவினர் இன்று சென்று கண்களை எடுத்து சென்றனர்.
பாக்யராஜ் மறைந்தும் தன்னுடைய கண்களால் வேறொருவர் உருவத்தில் இந்த உலகை காண இருப்பது குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.