தமிழக செய்திகள்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை கேட்ட மத்திய உள்துறை?- அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கையை பெற்று கவர்னர் மத்திய அரசிடம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி தினத்தில் 10-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்த நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அறிக்கை கேட்டதாக வெளியான தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 10-க்கும் அதிகமான படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தமிழக கவர்னரிடம் மத்திய உள்துறை அறிக்கை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கையை பெற்று கவர்னர் மத்திய அரசிடம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இந்த தகவலை தமிழக அரசோ, கவர்னர் மாளிகையோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

SCROLL FOR NEXT