தமிழக செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்தினேனா? சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத் விளக்கம்

குழந்தை மாத்திரையாக கொடுத்தால் துப்பிவிடுவால் என்பதால், தண்ணீரில் கலந்துகொடுக்க மாத்திரையை பொடித்தோம்.

தமிழ்நாட்டின் மனிதவளத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பரவிவரும் வீடியோவிற்கு அவர் விளக்கமளித்துள்ளார். அது போதைப்பொருள் இல்லையென்றாலும், தன் குழந்தைக்கு கொடுக்க நொறுக்கிய மாத்திரை என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டு பேசியுள்ள அவர்,

போதைப்பொருளை ஒழிக்கவேண்டும் என்பதற்காக காலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். அந்த நிகழ்விற்கு சென்றுவந்த பின்னர், தவறான ஒரு தகவலை பரப்பி வருகின்றனர்.

நான் எனது குடும்பத்தினருடன் 2 வருடத்திற்கு முன்பு ஐபிஎல் போட்டி காண்பதற்காக சென்றிருந்தேன். அப்போது எனது மகளுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்பதற்காக தண்ணீரில் கலந்துகொடுக்கலாம் என பொடித்தேன். விளையாட்டு மைதானத்தில் அவ்வளவு கூட்டம், காவல்துறை பாதுகாப்பு இருக்கும். என் முன், பின் நிறையபேர் இருப்பார்கள்.

அப்படி இருக்கும்போது என்னால் எப்படி போதைப்பொருள் பயன்படுத்த முடியும்? தற்போது அந்த வீடியோவை எடுத்து தவறாக பரப்பிவருகின்றனர். இது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.” என தெரிவித்துள்ளார்.