தமிழக செய்திகள்

தீரன் சின்னமலை பிறந்தநாள்: ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து தமிழ்நாடு வெல்லும் - மு.க.ஸ்டாலின்

தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்!

* அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்!

* இன்றோ, தமிழ்நாட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாத டெல்லி ஆதிக்கவாதிகள் 'தொகுதி மறுவரையறை' எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள்.

* அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே RSS எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்.

* இந்த ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து #TNWillFightTNWillWin எனத் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்! #வெல்வோம்_ஒன்றாக!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.