தமிழக செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் சத்யபாமா

வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்.

இடைத்தேர்தல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

12, 13, 14-ந் தேதி தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட் புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார்.

ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல்

தாராபுரம் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெறும்.

தவெக நிர்வாகி சத்யபாமா

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் ஆகியோருடன் சென்று சத்யபாமா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமைச்சர்களுடன் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்.

SCROLL FOR NEXT