தாராபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி 8,212 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று, த.வெ.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வந்தது.
இந்த நிலையில், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி முன்னிலை வகிக்கிறார். தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க. வேட்பாளர் பாஜமதி 8,212 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 7,612 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், 6,103 வாக்குகள் பெற்று தி.மு.க. மூன்றாம் இடத்திலும் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கள நிலவரமும் மாறி நிமிடத்திற்கு நிமிடம் மாறுகிறது.