தமிழக செய்திகள்

தவெக MLA மீது வழக்கு: பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்- டி.ஜி.பி. மகேஷ்குமார் உறுதி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதே முக்கியம். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது ஆபாச குறுஞ்செய்தி வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறும் என டி.ஜி.பி. மகேஷ்குமார் உறுதியளித்தார். பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எஸ்.பி. தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

பெண் கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கு தொடர்பாக, தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நேற்று முன்தினம் தான் புகார் வந்தது.

நியாயமான விசாரணை

தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி, எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடைபெறும். பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதே முக்கியம். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர் என்றார்.

SCROLL FOR NEXT