தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்

முதலமைச்சர் விஜய்க்காக பூங்கொத்து எடுத்து வந்த மோப்பநாய் ராக்கி.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தி் நடைபெற்ற காவல்துறை விருது வழங்கும் விழாவில் காவல்துறை அணிவகுப்புடன் முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

காவல்துறை அணிவகுப்பு மரியாதை

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். தமிழ்த்தா் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

அணிவகுப்பு மரியாதை

பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.

பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பு

ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.

2023, 2024, 2025 ஆண்டுககான 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.

இதில், ஏடிஜிபி மகேஷ்வர் தயார், விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, காஞ்சிபுரம் எஸ்பி அரவிந்த் ஆகியோருக்கு முதலமைச்சர் விருது வழங்கினார்.

ஜஜிக்கள் லோகநாதன், நரேந்திரன், பாபு, ரூபேஷ்குமார் மீனா, பிரவீன் குமார் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.

ரெயில்வே டிஜிபி வன்னியபெருமாள், சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.

புதிய ரோந்து வாகனங்கள்

கடலோரற காவல் நிலையங்களின் ரோந்து, கண்காணிப்பு பணிக்கக 42 மகேந்திரா தார் வாகன சேவைய முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

96 ஹோண்டா யூரிகார்ன் இருசக்க வாகனங்களின் சேவையை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சாகச நிகழ்ச்சிகள்

காவல்துறை விருது வழங்கும் விழாவில் பல்வேறு பிரிவினரின் சாகச நிகழ்ச்சிகளை முதலமைச்சர் விஜய் கண்டு ரசித்தார்.

மோப்ப நாய் ராக்கி

முதலமைச்சர் விஜய்க்காக பூங்கொத்து எடுத்து வந்த மோப்பநாய் ராக்கி.

நினைவு பரிசு

தமிழக காவல்துறை சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நினைவு பரிசு வழங்கி கவரவித்தார்.