தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் இந்தாண்டு கொலைகள் குறைந்துள்ளன- டிஜிபி மகேஷ் குமார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரித்து வருகிறோம்.

சென்னையில் தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து டிஜிபி கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொலைகள் குறைந்துள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரித்து வருகிறோம்.

முக்கியமான நிகழ்வுகளின்போது முறையாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு போதை பொருள் வழக்குகள் 74 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது.

64 சதவீத குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT