சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் இன்று தொடங்கி வைத்தார்.
கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்த் தனது காரில் சென்று கொண்டு இருந்தபோது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அமைச்சர் ஆனந்தின் கார் செல்ல முடியவில்லை.
உரிய நேரத்துக்கு நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போகும் என்பதால், உடனடியாக அரசு ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தார்.
நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் சென்று பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றதை மக்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ள நிலையில், கூவம் ஆற்றுப் பகுதியில் நீர் நிலைகளை கள ஆய்வு செய்து, தூர்வாரி பராமரிக்கும் பணிகளை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்