திமுக - அதிமுக கூட்டணியில் திருமாவளவன் முதலமைச்சர் என்ற (அதிகாரப்பூர்வமற்ற) செய்தி தற்போது ஓய்ந்துவரும் நிலையில், தன்னிடம் துணை முதலமைச்சர் பதவிக்காக பேரம் பேசப்பட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலை ஒட்டி, தாராபுரம் தொகுதி நாதக வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நேற்று மூலனூர் பகுதியில் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்கள் நடுவே பேசிய அவர்.,
“எடப்பாடி பழனிசாமி கூறியதுபோல, ஆதவ் அர்ஜூனா என்னிடம் பேசினார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால், நான் துணை முதலமைச்சர். அப்படிதான் என்னிடம் பேரம் பேசினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றதும், எனது மனைவியிடம் வேளாண்துறை அமைச்சர் பதவி தருகிறோம் எனப் பேசினர்.
ஆட்டுக்குக் கூட மூளை இருக்கிறது. தவெகவில் இருப்பவர்களுக்கு ஒன்றும் கிடையாது. குறிப்புகளோடு பேசுபவன் தலைவன் கிடையாது. குறிக்கோளோடு பேசுபவன்தான் தலைவன். திராவிட கட்சிகளுக்கு எதிராக 15 ஆண்டுகளாக போராடி நாதக கட்டமைத்து வைத்தது. தவெக வந்து அறுவடை செய்துவிட்டது.” என தெரிவித்தார்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமியும் ஆதவ் அர்ஜூனா துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.