தமிழக செய்திகள்

டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு: 3 கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

மாநகர நல அலுவலர், சுகாதார அலுவலர், ஆய்வாளர் தலைமையில் புதிய கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் ஆய்வு கொள்ளப்பட்டது.

தங்கும் விடுதிகள், மாணவர் விடுதிகள், பணிபுரிவோர் விடுதிகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை ஒழிக்க மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆணையர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-க்குட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக சிறப்பு குழுக்கள் பிரிக்கப்பட்டு இன்று காலை முதல் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

டெங்கு கொசுப்புழு உற்பத்தி

மாநகர நல அலுவலர், சுகாதார அலுவலர், ஆய்வாளர் தலைமையில் புதிய கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் ஆய்வு கொள்ளப்பட்டது. மொத்தம் 18 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 3 இடங்களில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டது. இதையடுத்து 3 கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி

மேலும் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், மாணவர் விடுதிகள், பணிபுரிவோர் விடுதிகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை ஒழிக்க மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆணையர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

SCROLL FOR NEXT