தமிழ்நாடு செய்திகள்

சென்னை தூர்தர்ஷன் முன்பு ஆர்ப்பாட்டம்- திமுக மாணவரணி அறிவிப்பு

இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும்.சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு மதியம் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மாலை மலர்

சென்னை:

திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை தொலைக்காட்சியின் பொன் விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு மதியம் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.