தமிழக சட்டசபை 
தமிழக செய்திகள்

எம்.எல்.ஏ.க்களின் கேள்விக்கு பதில் அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடந்த காலத்திலும் நீண்ட நாட்களாக பதில் வராத கேள்விகள் உள்ளன. 2021 கொடுத்த கேள்விகளுக்கு 2025 ஆம் ஆண்டு வரை பதிலே வராமலும் இருந்திருக்கிறது.

குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காதவர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கத்தை சபாநாயகர் கேட்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் அனுப்பாமல் தாமதப்படுத்துவதும் அவையை அவமதிக்கும் செயல் என்றார்.

தமிழக சட்டசபையில் இன்று திமுக எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசுகையில், இந்த அரசு பதவியேற்ற பின் நாங்கள் ஆயிரக்கணக்கான கேள்விகளை கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்பதால் கேள்வி நேரம் வைக்கப்படவில்லை. இதனால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

கேள்விகள் கொடுத்து 93 நாட்கள் ஆகிவிட்டது. விதிப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் பதில்கள் தயாரிக்க வேண்டும் அதிகாரிகள் மெத்தனபோக்கால் கால தாமதம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காதவர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கத்தை சபாநாயகர் கேட்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் அனுப்பாமல் தாமதப்படுத்துவதும் அவையை அவமதிக்கும் செயல் என்றார்.

ஓ.பன்னீர்செல்வம்

கடந்த சட்டமன்ற நிகழ்வுகளில் 2001ல் 20 கேள்விகளுக்கு கூட விடைகள் அளிக்கும் சூழல் இருந்தது. இவை எல்லாம் கடந்த காலங்களில் நடந்தவை. நான் அமைச்சராக இருந்த போது எனக்கு மட்டும் 2 கவன ஈர்ப்பு மற்றும் கேள்விகள் வரும். சட்டசபையில் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை அந்தந்த தொகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

நான் குறிப்பேடுகளை எடுத்து பார்த்தேன். கடந்த காலத்திலும் நீண்ட நாட்களாக பதில் வராத கேள்விகள் உள்ளன. 2021 கொடுத்த கேள்விகளுக்கு 2025 ஆம் ஆண்டு வரை பதிலே வராமலும் இருந்திருக்கிறது. ஆனாலும் நான் அதிகாரிகளிடம் விரைவாக பதில்களை தயாரித்து அனுப்புங்கள் என கூறியுள்ளேன். தற்போது 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் வந்துள்ளன. ஆனால் ஒரே துறையின் பதிலாக இருப்பதால் கூடுதலாக பதில் வந்தவுடன் விரைவில் கேள்வி நேரம் சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.