தமிழக செய்திகள்

வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின்வெட்டுகள் குறித்து கண்காணித்து வருகிறோம் - அமைச்சர் நிர்மல்குமார்

சோலார் மின் உற்பத்தியில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கி உள்ளது.

சென்னை கிண்டியில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மின்சாரத்துறையில் கட்டமைப்பு போதுமானதாக இல்லை.

* சோலார் மின் உற்பத்தியில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கி உள்ளது.

* சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க அடுத்த 2 வாரங்களில் புதிய கொள்கை அறிவிக்கப்படும்.

* மின்வெட்டு எதனால் ஏற்படுகிறது, எவ்வளவு நேரத்தில் சரி செய்யப்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறோம்.

* திட்டமிட்டு பியூஸ் கேரியர் பிடுங்கப்படுகிறது. திட்டமிட்டு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

* வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின்வெட்டுகள் குறித்தும் கண்காணித்து வருகிறோம்.

* பியூஸ் கேரியர் பிடுங்குவோர் சிலரை சிசிடிவி அடிப்படையில் கைது செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

* வடசென்னையில் மின்வெட்டை கண்காணித்து சரிசெய்ய கூடுதலாக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

* பெரம்பூரில் 40 நிமிடங்களில் சரி செய்யப்பட்டாலுமே சிலரின் தூண்டுதல் பேரில் போராட்டம் நடந்தது.

* இரவு நேரங்களில் மின்விநியோகம் தடை விவகாரத்தில் குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

* மின்வெட்டு தொடர்பாக மின்னகத்தின் மூலமே புகார்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.