பிரியாணி 
தமிழக செய்திகள்

தீபாவளி- சென்னையில் ஓட்டல்களில் குவியும் பக்கெட் பிரியாணி ஆர்டர்

புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட பின்னர் பிரியாணி கடைகளுக்கு படை எடுக்கிறார்கள்.

நாளை தீபாவளி கொண்டாட்டத்திற்கு இன்றே பக்கெட் பிரியாணியை மக்கள் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து வருகிறார்கள். அதிலும் குழந்தைகள் அதிகம் விரும்பும் பிரியாணி வாங்கி சாப்பிடுவது வழக்கமாக மாறி உள்ளது.

தீபாவளி பண்டிகையின் முக்கிய அங்கமாக பிரியாணி உணவு மாறி உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது வீடுகளில் பலகாரங்கள் செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுப்பது காலம் காலமாக இருந்து வந்த நடைமுறை. வீடுகளில் சமைத்த உணவையே சாப்பிட்டு மகிழ்ந்த காலம் அது.

தீபாவளி பண்டிகை

ஆனால் நவீன காலத்தில் எல்லா உணவுப் பொருட்களும் கடைகளில் விதவிதமாக கிடைக்கிறது. இனிப்பு, கார வகைகள் மட்டுமின்றி இவற்றை அன்பளிப்பு பெட்டியாகவும் தயார் செய்து விற்பனை செய்கிறார்கள். அந்த வகையில் கால நிலைக்கு ஏற்ப மக்கள் மாறிவரும் நிலையில் பண்டிகை கால உணவுகளும் தாராளமாக கடைகளில் விற்கப்படுகிறது. புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட பின்னர் பிரியாணி கடைகளுக்கு படை எடுக்கிறார்கள்.

பிரியாணி

பண்டிகையை கொண்டாடும் பெரும்பாலான மக்கள் தீபாவளி தினத்தில் அசைவ உணவு சாப்பிடுவதை விரும்புவது வழக்கம். அதிலும் குழந்தைகள் அதிகம் விரும்பும் பிரியாணி வாங்கி சாப்பிடுவது வழக்கமாக மாறி உள்ளது.

நாளை தீபாவளி கொண்டாட்டத்திற்கு இன்றே பக்கெட் பிரியாணியை மக்கள் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து வருகிறார்கள்.

சென்னையில் தீபாவளி பிரியாணி விற்பனை குறித்து பிரபல ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

எங்களுக்கு வாடிக்கையாளர்கள் போனில் தொடர்பு கொண்டு மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி ஆகியவற்றை கடந்த சில நாட்களாக முன் பதிவு செய்து வருகிறார்கள்.

சென்னையில் எங்கு திரும்பினாலும் பிரியாணி கடைகளுக்கு குறைவில்லை. தங்கள் பகுதியில் உள்ள பிரியாணி கடைகளை தேர்வு செய்து 5 பேர், 10 பேர், 20 பேர் என குடும்பமாக சாப்பிடக்கூடிய வகையில் பக்கெட் பிரியாணி ஆர்டர் கொடுக்கிறார்கள். கடைகளுக்குச் சென்று நேரடியாகவும் பிரியாணியை பதிவு செய்கின்றனர். பிரியாணியோடு சேர்த்து சிக்கன் 65, தந்தூரி சில்லி, சிக்கன் பிரைடு, சிக்கன் கபாப் உள்ளிட்ட விதவிதமான சைடு டிஷ்களும் ஆர்டர் செய்யப்படுகின்றன.

மட்டன் பிரியாணி

தீபாவளிக்காக எப்பொழுதும் அதிகளவில் பிரியாணி தயாரிக்கப்படும். கடந்த சில நாட்களாக புக்கிங் நடந்து வருகிறது. ஆன்லைன் விட நேரில் வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் வருவார்கள். காலை 11 மணிக்கு கடைகளுக்கு முன்பு வரிசை கட்டிவிடும்.

தீபாவளியை ஒட்டி சிறப்பு இனிப்பு பிரியாணியுடன் சேர்த்து வழங்கப்படும். சிக்கன் பிரியாணியைவிட மட்டன் பிரியாணி அதிக அளவில் விற்பனையாகும் பிரியாணி தயாரிக்கும் உணவு பொருட்கள் விலை உயர்ந்தாலும் கூட. பக்கெட் பிரியாணி மற்றும் பிரியாணி விலைய உயர்த்தவில்லை.

இவர் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT