தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை - சென்னையில் இருந்து 9 ஆயிரம் சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்

தீபாவளி சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய ஒரு லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.

நாளை 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு இயக்கப்படும் 6,573 பஸ்களுடன் கூடுதலாக 9,086 பஸ்கள் என மொத்தம் 15,659 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி திங்கட்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு ரெயில்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக தங்கி இருப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் அதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நம்பி உள்ள ஏழை நடுத்தர மக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

தீபாவளி சிறப்பு பஸ்கள்

சென்னை கோயம்பேடு, மாதவரம், மறைமலைநகர், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம், சி.எம்.டி.ஏ காலநிலை பூங்கா ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

நாளை 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு இயக்கப்படும் 6,573 பஸ்களுடன் கூடுதலாக 9,086 பஸ்கள் என மொத்தம் 15,659 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

தீபாவளி சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய ஒரு லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டுச் செல்லக்கூடிய சிறப்பு பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல விரிவான ஏற்பாடுகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT