கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழை நீர் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு வருகிறது. அந்த மாநிலத்துக்கு தேவைக்கு போக உபரி நீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
அதன்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 534 கனஅடி இருந்த நிலையில் இன்று 522 கன அடியாக குறைந்துள்ளது. நீர் மட்டம் 57.32 அடியாகவும், நீர் இருப்பு 22.73 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.