தமிழக செய்திகள்

த.வெ.க ஆதரவு குறித்து முடிவு- கம்யூனிஸ்ட் கட்சிகள் அவசர செயற்குழு கூட்டம்

திருமாவளவனுக்கும், ஆதரவுக்கரம் கோரி த.வெ.க நாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், வரலாறு காணாத வகையில் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியை அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை த.வெ.க தலைவர் விஜய் நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், த.வெ.க கட்சிக்கு ஆதரவளிக்க அவசர செயற்குழு கூட்டம் கூடி முடிவெடுக்கப் போவதாக மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கும், ஆதரவுக்கரம் கோரி த.வெ.க நாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நாளை (7ஆம் தேதி) பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு, தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகருக்கு, த.வெ.க தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழக அரசியல் வட்டாரம் சூடு பிடித்துள்ளது.