குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் காலமானார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குவைத் மன்னரின் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, குவைத் மன்னர் ஷேக் நவாப் அஹமத் ஜாபர் சபாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னை தலைமைச் செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.