மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலில் 5 இடங்களில் ரத்தகாயங்கள் இருந்ததாகப் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த பாலகிருஷ்ண னின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வௌி யானது. அதில் உடலில் 5 இடங்களில் ரத்தக்கசிவு காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கழுத்தின் இடது பக்கம் சாய்வான கயிறு தடம், வலது பக்கம் 3 சிராய்ப்பு காயங்களும், கழுத்தின் வலதுபுறம் ஊசி குத்தியது போன்ற 3 அடை யாளங்களும் இருந்துள்ளன. முதுகு பகுதியில் நீல நிற ரத்தக்கசிவு காயம் இருந்ததாகவும், மூளை 1,400 கிராம் எடையுடன் கூடுதல் வீக்கமாகவும், இதயம் 358 கிராம் வீக்கமாகவும், இடது முழங்கால் மற்றும் இடது கையில் சிராய்ப்பு காயம் இருந்துள்ளது.
அதேபோல் நுரையீரலில் சிறிய ரத்தக்கசிவும், நுரை போன்ற திரவமும் இருந்துள்ளது. பல இடங்களில் சிறிய புள்ளி வடிவ ரத்தக்கசிவுகள் தென்பட்டுள்ளன.
தொடர்ந்து ரசாயன பகுப்பாய்வு மற்றும் திசுவியல் பரிசோதனைக்கு பிறகே பாலகிருஷ்ணன் இறந்ததற்கான முழு விபரமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே உயிரிழந்த பாலகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, தலைமைக்காவலர் பழனிவேல் ராஜன், பெண் காவலர் கலைச்செல்வி ஆகிய 3 பேரும் சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளனர்.
இது குறித்து தென்மண் டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி கூறுகையில், விசாரணை வெளிப்படையாகவும், நடுநிலையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மாஜிஸ்திரேட்டு விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது என்றார்.இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழுவினர் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.
விசாரணை குழுவினர் முதற்கட்டமாக வாலாந்தூர் போலீஸ் நிலையம், லாரி தீ விபத்துக் குள்ளான கண்மாய்க்கரை பகுதி, தேனியில் உள்ள பார்சல் சர்வீஸ் நிறுவனம், செக்கானூரணி காவல் நிலையம் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகிய பகுதிகளில் நேரடியாக சென்று விசாரணை நடத்த இருக்கிறார்கள்.
கடந்த 2 நாட்களாக பேரையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஆனந்தராஜா செக்கானூரணி போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து பலமணி நேரம் விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளார்.
முன்னதாக சஸ்பெண்டு செய்யப்பட்ட இன்ஸ்பெக் டர் உள்ளிட்ட 3 பேரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் தான் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.