தமிழக செய்திகள்

வங்கக்கடலில் உருவான அக்வான் தீவிர புயலாக வலுப்பெற்றது - வானிலை ஆய்வு மையம்

அக்வான் புயல் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்கிறது.

மத்திய வங்காள விரிகுடாவில் நிலவும் அக்வான் புயலானது தீவிரப் புயலாக வலுப்பெற்றது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் நிலவிய அக்வான் புயல் மேலும் வலுப்பெற்றது.

தீவிரப்புயலாக வலுப்பெற்ற அக்வான் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை மிகத்தீவிரப்புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

அக்வான் புயல் ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரைப்பகுதிகளில் நெல்லூருக்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க உள்ளது.

தீவிர புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

தீவிரப்புயலாக வலுப்பெற்ற அக்வான் புயல் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்கிறது.

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

அக்வான் புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு-தென்கிழக்காக 610 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. கோபால்பூரில் இருந்து (ஒடிசா) தெற்கே 730 கி.மீ. தொலைவில் அக்வான் புயல் நிலை கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையில் கடந்த 'அர்னாப்', 'முரசு' ஆகிய 2 புயல்களும் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தபோது தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த 'அக்வான்' புயலும் மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT