சென்னையில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
* அடிப்படை உறுப்பினராக இருப்பேன் என்று ஓபிஎஸ் கூறிய போதும் அதனை இபிஎஸ் ஏற்க மறுத்தார்.
* அதிமுகவை படுதோல்வி அடைய செய்ததற்கு இபிஎஸ் தான் காரணம்.
* இபிஎஸ் உடன் இருந்தால் நல்லவன், இல்லாவிட்டால் நாங்கள் துரோகியா?
* ஒருங்கிணைந்த அதிமுகவே எங்களுடைய ஒரே கோரிக்கை
* பொதுக்குழு என்ன முடிவெடுத்தாலும் அதனை தலைவணங்கி ஏற்கிறோம்.
* மீண்டும் தமிழகத்தை அதிமுக ஆள வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
* ஒரு பக்கம் பேசலாம் என சொல்லிவிட்டு மறுபுறம் பொறுப்பில் இருந்து நீக்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.