செக்கானுரணி காவல் மரண விவகாரத்தில்,உடற்கூராய்வு அறிக்கையில் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆர். பாலகிருஷ்ணன், தனது சரக்கு வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில், நவம்பர் 14, 2026 அன்று மதுரை செக்கானூரணி காவல் நிலைய கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததால காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது .
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42) என்பவரின் உடற்கூராய்வு அறிக்கையில் கழுத்து, மார்பு, முதுகு மற்றும் உள்ளுறுப்புகளில் பல்வேறு காயங்கள் பதிவாகியிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகிருந்தது.
காவல்துறையினரின் சித்திரவதையால்தான் பாலகிருஷ்ணன் உயிரிழந்ததாகவும், அவர் அழைத்துச் செல்லப்பட்ட நான்கு காவல் நிலையங்களின் செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் உசிலம்பட்டி தாலுகா) சிசிடிவி காட்சிகளைப் பாதுகாத்து தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவரது மனைவி பி. சுதா மனு தாக்கல் செய்திருந்தார்.இதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை காண அனுமதி அளித்திருந்தனர்.
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஓட்டுனர் பாலகிருஷ்ணன் நவம்பர் 11-ந் தேதி காவல் நிலைய கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது உடற்கூராய்வில் உடலில் காயங்கள் இருப்ப தும் தெரிய வந்துள்ளது. சி.சி.டி.வி. காட்சிகளை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
எனவே இந்த வழக்கில் உண்மையை கண்டுபிடிக்க ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரண வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவும், ரூ.50 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் சம்பந்தப் பட்ட காவல்துறையினரில், சிலர் பணியிடை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ள னர். அவர்கள் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது
அதையடுத்து, உடற் கூராய்வு அறிக்கையை பார்த்த நீதிபதிகள், உடற்கூராய்வில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. அவ்வாறெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? என கேள்வி எழுப்பி சம்பந்தப்பட்ட வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் விசாரணை அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வழக்கை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.