தமிழக செய்திகள்

செக்கானூரணி காவல் மரணம்: சிசிடிவி காட்சிகளை காண நிபந்தனையுடன் குடும்பத்தினருக்கு அனுமதி

காவல் நிலையங்களில் வரும் 23ம் தேதி சிசிடிவி காட்சிகளை காண அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழந்த பாலகிருஷ்ணன குடுபத்தினர் சிசிடிவி காட்சிகளை காண சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி வழங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், சரக்கு லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக நவம்பர் 13-ஆம் தேதி செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நவம்பர் 14-ஆம் தேதி காலை காவல் நிலையக் கழிவறையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையால் கூறப்பட்டது

மனு தாக்கல்

தனது கணவர் காவல்துறையினரின் சித்திரவதையால்தான் உயிரிழந்தார் என்றும், உண்மையை அறிய செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா ஆகிய 4 காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளைப் பாதுகாத்து வழங்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணனின் மனைவி பி. சுதா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சிசிடிவி காட்சிகளை காண அனுமதி

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவி சுதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி. லிங்கேஸ்வரன், செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் உசிலம்பட்டி தாலுகா ஆகிய 4 காவல் நிலையங்களில் வரும் 23ம் தேதி சிசிடிவி காட்சிகளை அவரின் மனைவி, 2 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் காண அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

நகல்களை தாக்கல் செய்ய ஆணை

பாதுக்காக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் இரண்டு நகல்களை, பாதுகாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் இரண்டு நகல்களை, பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA) பிரிவு 63-ன் கீழ் சான்றிதழுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளை பதிவு செய்ய அனுமதி இல்லை

வழக்கானது சிபிசிஐடி விசாரணையில் இருப்பதால், மனுதாரருக்கு (குடும்பத்தினருக்கு) தற்போதைய நிலையில் சிசிடிவி காட்சிகளின் நகல்களை வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதனால், காட்சிகளை நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்பத்தார் அந்த சிசிடிவி காட்சிகளை பதிவு செய்யக்கூடாது என்றும் செய்தியாளர்களை சந்திக்க கூடாது எனவும் நிபந்தனையானது விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT