தமிழக செய்திகள்

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து - அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் சஸ்பெண்ட்

விபத்து நடந்த இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு செய்தார்.கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார்,

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே, காவல்துறை முறையாக விசாரணை நடத்தும் என்றும் விசாரணைக்குப்பின் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கச் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பணியில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி கேட் கீப்பர் பங்கச் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT