கோவை
தமிழக செய்திகள்

கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் பணிகள் தீவிரம்: போலீசார் தொடர் சோதனை

பொதுமக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் கண்காணிப்பு

பொதுமக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி சந்தேகத்துக்கு இடமான நபர்களின் நடமாட்டத்தை கவனித்து வரும் போலீசார், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் பட்டியலையும் சேகரித்து உள்ளனர்.

அதேபோல கோவை மாநகரில் காந்திபுரம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு போன்ற முக்கிய பகுதிகளில் மாநகர போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு சோதனை

மேலும் எந்தவித அசம்பாவித சம்பங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 7 சரக உதவி கமிஷனர்கள் தலைமையில் குண்டு வெடிப்பு தடுப்பு பிரிவு நிபுணர்கள் களமி றக்கப்பட்டு உள்ளனர்.

மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் வணிக வளாக பகுதிகளில் தீவிர சோதனை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பண்டிகை காலத்தை பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி பாதுகா ப்பாக கொண்டாடும் வகையில் கோவை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே அனுமதியின்றி தற்காலிக கடைகளை அமைத்து பட்டாசு விற்பவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT