தமிழக செய்திகள்

தமிழகத்தில் திமுக கூட்டணி இப்போது இல்லை..!- பெ. சண்முகம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவெக அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.

இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்வதாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர் ஆளும் கட்சியில் பலனை எதிர்பார்த்து சேருவதும், வாக்களித்த மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் வெற்றி பெற்றவர்கள் போய் ஆளும் தரப்பிடம் சேருவதும் ஒன்றல்ல.

அடுத்து ஒரு தேர்தலைச் சந்திக்க வேண்டும்; அவர்கள் வீட்டு பணத்தையா செலவழிக்கப்போகிறார்கள்.

இரண்டும் ஒன்றல்ல, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அலையும் இல்லை. அலை என்பதற்கும் தனிப்பெரும் கட்சி என்பதற்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது. அலை இருந்திருந்தால் அவருக்கு பெரும்பான்மை கிடைத்திருக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமாரின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

மதசார்பின்மை கொள்கையில் தமிழக வெற்றிக் கழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.

அதிமுக அடுத்த தேர்தலில் இருக்குமா என்பது சந்தேகம் தான். அதிமுக அழிவிற்கு பாஜக தான் காரணம்.

24 அதிமுக எம்எல்ஏக்கள் அவர்களாக தான் ஆதரவு கொடுத்தனர். தவெக அவர்களிடம் ஆதரவு கேட்கவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை 3 மாதம் கூட தாங்காத என கூறுவது தவறானது. அப்படி சொல்லக்கூடாது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.