தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று மாநில செயலாளர் சண்முகம் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாளை நடைபெறும் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது.
* சட்டமன்றம் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மன்றமாக நடக்க வேண்டும்.
* ஆளுங்கட்சி என்ற முறையில் தவெகவிற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.
* சட்டசபை மக்கள் வரிப்பணத்தில் தான் நடக்கிறது. அவர்களின் சொந்த பணத்தில் நடக்கவில்லை.
* ஏதாவது ஒரு கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளித்தாரா?
* உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் ஒன்றுக்கு கூட முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை.
* நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசுவோம் என்ற வகையில் சட்டமன்றத்தை நடத்த வேண்டும்.
* சட்டசபை சண்டை மன்றமாகவும் கத்துவதற்கான மன்றமாகவும் நடைபெறுவதை கண்டிக்கிறோம்.
* மிசா குறித்த அமைச்சர் நிர்மர்குமாரின் பேச்சு அறியாமையின் வெளிப்பாடு.
* சேற்றை வாரி வீசுவதை போன்று அமைச்சர்கள் பேசக் கூடாது.
* தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
* தவெக அமைச்சர்கள் முதலில் நிறைய படிக்க வேண்டும் என்று நான் அறிவுரை கூறுகிறேன்.
* வரலாறு தெரியாது திமுகவின் மீது இருக்கும் வெறுப்பில் சகட்டு மேனிக்கு பேசுவது தவறு.
* 3 கோப்புகள் மேஜையில் இருப்பதாக கூறும் முதல்வர் ஏன் 50 ஆண்டுகள் முன் உள்ளவற்றை கிளறுகிறார்.
* ஊழலில் நடவடிக்கை என்பதில் கம்யூனிஸ்ட் உறுதியாக உள்ளது, தவெக உறுதியாக உள்ளதா என்றுதான் சந்தேகம் எழுகிறது.
* வீணான விவாதங்களில் சட்டசபை நேரம் விரயம் ஆவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.
* வரும் தேர்தல்களை கூட்டணியாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என தவெக அமைச்சர்கள் கூறினர்.
* தவெக அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்.
* தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் 5 ஆண்டு ஆதரவு தொடர வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாட்டை பொருத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.