தமிழக செய்திகள்

‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக கூட்டணியில் இல்லை’ - மு. வீரபாண்டியன்

தவெக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக அமைச்சர்கள் இன்று அதன் கூட்டணி மற்றும் ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் விஜய் தலைமையில், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தவெக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.

இடதுசாரித் தலைவர்கள்

சென்னை தி.நகரில் உள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவை அமைச்சர்கள் குழு நேரில் சந்தித்தனர். அப்போது கூட்டத்திற்கான அழைப்பிதை வழங்கியதாக கூறப்படுகிறது.

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அமைச்சர்கள் குழு விரைவில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.

இடதுசாரிகள் மறுப்பு

இந்த சந்திப்புகள் கூட்டணி குறித்த அழைப்பு என தகவல்கள் வெளியாகி வரும்நிலையில் இடதுசாரி கட்சிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.

குஜிலியம்பாறை வட்டாட்சியர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் இடதுசாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவிக்கவே அமைச்சர்கள் தன்னை சந்தித்தாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் இல்லை

அதுபோல தவெகவின் கூட்டணியில் நாங்கள் இல்லை என்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் தெரிவித்துள்ளார்.

தவெக அரசை சிபிஐ கட்சி வெளியில் இருந்து மட்டுமே ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் மட்டுமே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

தவெக அமைச்சர்கள் தங்களை வந்து சந்தித்தபோது அரசியல் குறித்துப் பேசினோம் என்றும், அவர்கள் தங்களை அமைச்சர்களாக அல்லாமல் தவெக நிர்வாகிகளாகவே சந்தித்தனர் என்றும் வீரபாண்டியன் விளக்கமளித்துள்ளார்.

SCROLL FOR NEXT