தமிழக செய்திகள்

ஏர்வாடி அருகே ஆட்டு குட்டிக்கு பால் கொடுக்கும் பசு மாடு

ஆட்டுக்குட்டிகள் பசு மாட்டிடம் பால் குடிக்க சென்ற போது பசுவும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது.

பசுமாடு ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நிகழ்வை அக்கம்பக்கத்தினர் பார்த்து வியப்படைந்து செல்கின்றனர்.

நெல்லை

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்தனம். விவசாயி. இவர் தனது வீட்டில் பசு மாடு மற்றும் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள பசு மாடு கன்று ஈன்றது.

ஆட்டுக்குட்டிகள்

அதேபோன்று ஆடு ஒன்றும் இரண்டு குட்டிகள் போட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டுக்குட்டிகள் பசு மாட்டிடம் பால் குடிக்க சென்ற போது பசுவும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது.

பசுமாடு ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நிகழ்வை அக்கம்பக்கத்தினர் பார்த்து வியப்படைந்து செல்கின்றனர்.

SCROLL FOR NEXT