தமிழக செய்திகள்

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

புலி அருவியில் இரவில் தண்ணீர் அதிக அளவில் வரும்பொழுது அதில் மலைப்பாம்பு ஒன்று தண்ணீரில் அடித்து வரப்பட்டது.

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்ததால் அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தத.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலையில் பெய்த மழையினால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவி

குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று மற்ற அருவிகளான புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது

புலி அருவி

புலி அருவியில் இரவில் தண்ணீர் அதிக அளவில் வரும்பொழுது அதில் மலைப்பாம்பு ஒன்று தண்ணீரில் அடித்து வரப்பட்டது. அது புலி அருவியின் தடாகத்தில் விழுந்து பின்பு தண்ணீர் விழும் சுவற்றில் ஏறி ஊர்ந்து சென்றது. அதனை அருவியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர், பின்பு பாம்பு ஊர்ந்து காட்டுக்குள் மறைந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சுற்றுலா பயணிகள்

இரவு முழுவதும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்ததால் அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தத. இன்று காலையில் ஐந்தருவி, மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவிக்கு வரும் தண்ணீர் அளவு கணிசமாக குறைந்தது. நேற்று காலையில் மெயின் அருவியில் எவ்வாறு தண்ணீர் விழுந்ததோ அதேபோன்று இன்று காலையில் விழுந்து வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT