தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினர் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது.

முதற்கட்டமாக மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினர் பங்கேற்கின்றனர். 38 இடங்கள் உள்ள விளையாட்டு வீரர்கள் பிரிவில் 504 பேர் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 150 இடங்களுக்கு 14 பேர் பங்கேற்கின்றனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 40 நாட்கள் நடைபெறுகிறது.