தமிழக செய்திகள்

திண்டுக்கல்லில் பயங்கரம்- கவுன்சிலரின் தந்தை ஓட ஓட வெட்டிக் கொலை

கவுன்சிலரின் கண்களில் மிளகாய் பொது தூவிவிட்டு கொலை செய்துள்ளனர்.சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு.

திண்டுக்கல் மாநகராட்சியின் 25வது வார்டு கவுன்சிலர் சிவக்குமாரின் தந்தை நாகராஜன். மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென நாகராஜனை சூழ்ந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மர்ம நபர்கள் விரட்டியபோது கவுன்சிலரின் கண்களில் மிளகாய் பொது தூவிவிட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் முன்பகை காரணமாக கொலை நடைபெற்றதா ? அல்லது தொழில் போட்டி காரணமா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT