இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.
இதில் அசாமின் ஒரு நாடாளுமன்ற தொகுதியும், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் 5 சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும்.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் இத்தேர்தலில் களம் காணும் நாம் தமிழர் கட்சி, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன்படி, தாராபுரத்தில் கார்த்திகாவும், மதுராந்தகத்தில் ஜானகிராமன், தட்டாஞ்சாவடியில் கார்த்திக் குமாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 5 முனை போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது.
இடதுசாரிகள் இன்று தாங்கள் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்த நிலையில், நாளை மறுநாள் (செப்.15) வேட்பாளர்களை அறிவிக்கின்றனர்.